உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் மூன்றாம் அலை பரவும் அபாயம்… எச்சரிக்கும் நீதிமன்றம்
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நீதிமன்ற தலையீட்டின் காரணமாக, 3 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.
ஆனால், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனால், தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் இருக்கும் மாநகராட்சி, நகராட்சிகளுக்குக்கான உள்ளாட்சித்தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததற்கு சட்டப்பேரவைத் தேர்தலும் முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உள்ளாட்சித்தேர்தலை நடத்தினால் மூன்றாவது அலை வேகமாக பரவ அதிக வாய்ப்புள்ளது.
தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு விசாரிக்கலாம்” எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.