அமெரிக்காவில் 12 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவில் உள்ள மியாமி-டேட் கவுண்டியில் உள்ள 12 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விடிந்துள்ளது.
நேற்று(24.6.2021) அதிகாலை நடந்த இந்த விபத்தில் அந்த இடமே புகை மண்டலமாகக் காட்டியளித்தது.
தகவலறிந்து வந்த மீட்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். புகை அதிக அளவில் இருந்ததால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் இருந்து 12 வயது சிறுவன் உட்பட 37 பேரை மீட்டுள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாயமான 100க்கும் அதிகமானோரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனாலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்து இருப்பர் என அஞ்சப்படுவதாக தீயணைப்புத் தலைவர் ஆலன் கொமின்ஸ்கி தெரிவித்துள்ளார்.