ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு பரிசுத் தொகை
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனையடுத்து, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை இன்று முதலைமைச்சர் தொடங்கி வைத்தார்.
முகாமைத் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், “விளையாட்டு போட்டிகளுக்கு டீம் ஸ்பிரிட் மிக முக்கியமாக கருதப்படுகிறது.ஏனெனில்,வீரர்கள் ஒரே நோக்கில் இருந்தால்தான் முழு வெற்றியை பெற முடியும்.விளையாட்டு துறைக்கு அரசு என்றுமே துணை நிற்கும்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி,வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.2 கோடி,வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.