ஜி. பி முத்துவும் கைதாவாரா?
அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசி குழந்தைகளின் மனதைக் கொடுக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், யூ டியூப்பில் தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வந்த மதன் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு, பலர் மீது புகாரளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் ஜி.பி முத்துவும் இணைந்துள்ளார். ஆபாச பேச்சுக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கும் காவல்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முஹைதீன் இப்ராஹிம், “கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர்.
இந்தச் சூழலை பயன்படுத்தி ஃபேஸ்புக், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் பெருகி வருகின்றன.
அந்த வகையில், ஆபாச பேச்சுக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு, கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனப் புகாரளித்துள்ளார்.