கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் அதிரடி
திமுக, தேர்தல் பிரச்சார பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில், மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.
“திமுக ஆட்சிக்கு வருவது உங்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தான். ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு தொகுதியிலும் நீங்கள் கொடுத்த கோரிக்கை மனு பெட்டிகள் திறக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்”. இவ்வாறு பிரசாரத்தில் பேசியுள்ளார் ஸ்டாலின்.