பாராசிட்டமால் – தேவையான அளவு : இந்த மாத்திரையை தினசரி சாப்பிட கூடாது

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா, மக்களை  வாட்டி வதக்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த மாதம் கொரோனா முற்றிலும் அழிந்து விடும் என்று சொல்லி சொல்லி இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பும் கொரோனாவின் கோரதாண்டவம் குறைந்த பாடில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற ஒற்றை இலக்குடன் உலகின் பெரும்பாலான நாடுகள் பயணித்து வருகிறது.இந்நிலையில் இரண்டு வருட கொரோனா பொதுமுடக்கத்தில் சுமார் 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

இச்செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியது.இந்நிலையில்  பாராசிட்டமால்  மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்தது, “பாராசிட்டமால் மாத்திரைகளை தின்தோறும் பயன்படுத்துவது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துவதுடன், நெஞ்சுவலியையும் ஏற்படுத்தும். எனவே நோயாளிகளுக்கு இம்மாத்திரையை பரிந்துரைக்கும் பொது, மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்று பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…