ஒரு வழியா கொண்டு வந்துட்டாங்க! அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இதனால் பல லட்சம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்ததோடு, உணவின்றியும் தவித்து வந்தனர்.

இதனை தடுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைய தொடங்கியது.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய கொரோன வைரஸான ஓமைக்ரான் பரவ தொடங்கியது. இதனால் மீண்டும் பல நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவிடம் கிடைத்த தரவுகளின்படி அமெரிக்காவில் டெல்டா அலையின் போது ஏற்பட்ட தினசரி இறப்பு விகிதத்தை காட்டிலும், ஒமிக்ரானால் அதிகளவில் இறப்பது ஏற்படுவது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் தினசரி இறப்பு எண்ணிக்கை நவம்பர் பாதியிலிருந்து அதிகரித்து வருகிறது. வாரத்தில் நாள் ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டுகிறது

இந்நிலையில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அமெரிக்க மருந்து கட்டுப்பாடு  முகமையுடன் பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. மேலும் 2 டோஸ்களாக இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு  செலுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…