தூக்கத்துல எப்படி மோட்டார் இயக்கும் திறன் அதிகரிக்கும்!

அனுபவமே ஒருவருக்கு சிறந்த ஆசான் ஆகும். ஆனால், தூக்கமும் கூட மனிதனுக்கு அனுபவ அறிவை கொடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய மோட்டார் இயக்கும் திறனை கற்றுக்கொள்வதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் வழக்கமான தூக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாக தூங்கினால் உதவியாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனை நியூரோசி எனும் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒரு குழுவிற்கு அவர்களின் வழக்கமான தூக்கநேரத்தில் மாற்றம் செய்யாமல் இந்த புதிய திறனை கற்றுக்கொள்வதிலும்,அதனை செயல்படுத்துவதிலும் எப்படி செயல்படுகிறார்கள் எனவும், மற்றொரு குழுவிற்கு அவர்களின் தூக்க நேரத்தை அதிகப்படுத்தியும் அவர்களின் செயல்படும் திறன் சோதிக்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு கேம் கொடுத்து விளையாட வைக்கப்பட்டனர். சிறிது நேரம் பயிற்சிக்கு நேரம் வழங்கப்பட்டது. இந்த கேமில் அவர்களுக்கு கேட்கும் சத்தத்தினை அடையாளம் கண்டு சுட்டியினை(cursor) இயக்க வேண்டிய சவாலான சோதனை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர், கண்களைக் கட்டிக் கொண்டு இந்த கேமினை விளையாட வைக்கப்பட்டனர்.
இந்த சோதனைக்குப் பிறகு பங்கேற்பாளர்கள் 90 நிமிடம் தூங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தூங்கும் போது இந்த கேமில் வரும் சத்தங்கள் பாதிக்கு மேல் அவர்களுக்கு இசைக்கப்பட்டது. அதற்கு பின்னர் மறுபடியும் அவர்களுக்கு இந்த கேம் விளையாட கொடுக்கப்பட்டது. இந்த முறை அவர்களின் விளையாடும் திறன் இன்னும் அதிகரித்து காணப்பட்டது.மேலும், அவர்கள் முன்னர் கேட்டிறாத சத்தங்களுக்கும் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. அதே போன்று அவர்கள் சுட்டியை இயக்கும் வேகமும் அதிகரித்தது. இதன்மூலம் தூக்கத்தில் அவர்களுடைய நினைவுத்திறன் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.