கண் காது பிரச்சினைக்கு இதை செய்யுங்கள்….

காது வலி சரியாக..
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறெடுத்து வலியுள்ள காதில் 2 சொட்டுவிட காது வலி குணமாகும்.
காதில் சீழ் வடிந்தால்..
வசம்பு பூண்டு கறி மஞ்சள் வகைக்கு அரை ரூபாய் எடுத்து அரை ஆழாக்கு வேப்பெண்ணையில் தட்டி போட்டு பதமாக காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு இரண்டு துளி காதில் விட்டு வர காதில் சீழ் வடிவது நிற்கும்.
வெள்ளை முள்ளங்கியின் இலையை கசக்கி சாறு எடுத்து காதில் 2 துளி விட்டால் காது வலி காதில் சீழ் ரத்தம் வருதல் நின்று விடும்.
கண்ணில் நீர் வடிகிறதா?
தூங்குவதற்கு முன் கண்ணில் ஒரு துளி வெங்காயச் சாறு விட்டு வர மூன்று நாட்களில் குணமாகும்.
கண் வலிக்கு…
கருவேலம் கொழுந்தில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து பசும் பால் விட்டு அரைத்து அடை போல் தட்டி இரண்டு உள்ளங்காலில் வைத்து கட்டி மழைக் கண் வலி குணமாகும்.
கண்ணில் தூசு விழுந்து விட்டதா?
கண்களை கசக்காமல் 2 துளி விளக்கெண்ணெய் விட்டு அப்படியே படுத்திருக்க தூசும் மணலும் தாமே ஒதுங்கி வெளிவந்துவிடும்.