கர்ப்பப்பை கோளாறு நீங்க..

30 கிராம் லவங்கப்பட்டை அரை லிட்டர் நீர் விட்டு பாதியாக காய்ச்சி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் காலையில் குடித்து வர கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். குழந்தை பிறந்த பின் சில நாட்களுக்கு இதை குடித்து வர கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலையை அடையும்.

சில பெண்களுக்கு வீட்டு விலங்கின் போது வயிற்றில் வலி கண்டு தொல்லை ஏற்படுத்தும். மருந்து கடைகளில் பிரண்டை உப்பு கிடைக்கும். 2 குன்றிமணி அளவு எடுத்து வெண்ணெயில் குழைத்து நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர இந்த வலி குணமாகும்.

மாதவிலக்குக்கு முன்பும் பின்பும் கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டால் கல்யாண முருங்கை இலை சாற்றை காலையில் தொடர்ந்து பத்து நாள்கள் பருகி வர வயிற்று வலி தொந்தரவு ஒழிந்து போகும்.

அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டால் அசோகமரப்பட்டை மாதுளம் பழத்தோல் மாதுளம் வேர்ப்பட்டை சம அளவு எடுத்து உலர்த்தி தூள் செய்து தினமும் இரண்டு வேளை சிட்டிகை அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர இரண்டொரு வாரங்களில் கர்ப்பப்பை பலம் அடைந்து கருச்சிதைவு ஏற்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…