“மருந்தாகும் பாகற்காய்”

பாகற்காய் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக கொடுக்கும்.
பாகற்காயை ஊறுகாய், பொரியல் ,வறுவல், தொக்கு ,குழம்பு ,கூட்டு என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
வைட்டமின் ஏ, பி, சி , பீட்டா கரோட்டின் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
சுவாசக் கோளாறுகள் நீங்கும்
பசுமையான பாகற்காய் உண்டால் ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவை நீங்கும்.
பருக்கள் மறையும்
பாகற்காயை உண்டு வந்தால் சருமத்தில் உள்ள பருக்கள் ,கருப்பு தழும்புகள், அதிகமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும்.
நீரிழிவு நோய் குறையும்
டைப் டூ நீரழிவு நோயை எதிர்கொள்ள பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காய் சாற்றில் உள்ள வேதிப்பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை இன்சுலின் போல செயல்பட்டு குறைக்கிறது.