பீட்ரூட் ஃபேஸ் பேக் ; இளமையான ஆரோக்கியமான சருமம்!

எத்தனை பேருக்கு தெரியும் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்து நம் உடலை மட்டுமல்ல நம் சருமத்தையும் கூட ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ளும் என்று.
தேவையான பொருட்கள்:
1) சிறிய பீட்ரூட்- 1
2) அரை எலுமிச்சை பழச்சாறு
3) ஊற வைத்த அரிசி மாவு-1 தேக்கரண்டி
4) கற்றாழை ஜெல்-2 தேக்கரண்டி
செய்முறை:.
பீட்ரூட்டை எடுத்து அதன் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். பின்பு அவற்றை மிக்ஸியில் சேர்க்கவும் அதனுடன் ஊறவைத்த அரிசி கற்றாழை ஜெல் எலுமிச்சை சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்களவும்.
தயாராகிய இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசி பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வைத்திருக்கவும்.பின்பு குளிர்ந்த நீரால் அதை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால் சருமத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து இறந்த செல்கள் அகன்று சர்மம் இளமையாக இருக்கும்.