மலச்சிக்கல் பிரச்சினை தீர வேண்டுமா?

மலச்சிக்கல் பிரச்சனை இன்று பொதுவான ஒரு விஷயமாக மாறிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் சரியான உடற்பயிற்சி சத்தான உணவு என்று இயற்கையான முறையிலேயே இதை சரி செய்ய வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனைக்கு மிகவும் முக்கியமான காரணங்கள் என்னவென்றால் வேலைப்பளு காரணமாக சரியான உணவு உட்கொள்ளாமல் இருப்பது அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே. மலச்சிக்கலில் இருந்து வெளியேற கீழ்காணும் இயற்கையான முறைகளை ட்ரை பண்ணுங்க முயற்சி செய்யுங்கள்.
1) கருப்பு திராட்சை சாறு
செய்முறை:
பத்து உலர்ந்த கருப்பு திராட்சை எடுத்துக் கொள்ளவும், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்க்கவும் கால் தம்ளர் தண்ணீரை சேர்க்கவும்.
ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்பு திராட்சையை நீரில் மசித்து குடிக்கவும்.
2) சோம்பு தண்ணீர்
செய்முறை:
சோம்பு ஒரு தேக்கரண்டி, இந்து உப்பு தேவையான அளவு, ஒரு தம்ளர் தண்ணீர். இம்மூன்றையும் கொதிக்கவைத்து வடிகட்டி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கொடுக்கவும். இதன் பலன் குறைவாக தெரிந்தால் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
3) முள்ளங்கிச்சாறு
செய்முறை:
ஒரு முள்ளங்கியை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்பு வடிகட்டி அந்நீரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குடிக்கலாம்.
எச்சரிக்கை:
மேற்கண்ட முறைகளில் ஏதோ ஒன்றை பயன்படுத்தும்போது வயிற்றுப்போக்கு வேறு ஏதோ உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்தி விடவும். கர்ப்பிணி பெண்கள், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மேற்கண்ட முறைகளை முயற்சிக்க வேண்டாம்.