அரவிந்த் கண் மருத்துவமனையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

சென்னையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் பணிபுரிய பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த 17 வயது முதல் 19 வயது நிரம்பிய மாணவிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மற்றும் தங்குமிடம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் முடிவடைந்த பின் உறுதியான வேலைவாய்ப்பு உண்டு எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப்படிவம் வழங்கப்படும் இடம்: அரவிந்த் கண் மருத்துவமனை பூந்தமல்லி நெடுஞ்சாலை, சவீதா பல் மருத்துவ கல்லூரி எதிரில், நூம்பல், சென்னை – 600077.
தொடர்புக்கு,
போன்: 044-40956100
செல்: 9840903930
மேலும் விவரங்களுக்கு https://cutt.ly/mloptamil