உடல் எடையை குறைக்க தினமும் இதை சாப்பிடுங்க!!

நாம் தினமும் சாப்பிடும் பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. அதே போல் உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தருவதாக அமைந்துள்ளது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

அதே போல் ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த பேரீச்சை பெரிதும் உதவுகிறது. பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் கொழுப்புகளை கரையக்கூடியது. இதன் உடல் எடை கிடுகிடுவென குறைகிறது. இதனை தொடர்ந்து செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது .

இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அதே சமயம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்வும், வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

இதில் உள்ள வைட்டமின், பொட்டாசியம், சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் போன்ற சத்துக்கள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மேலும், நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்க பேரீச்சை உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *