திப்பிலியின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?

திப்பிலி உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான மருந்துப் பொருளாக உள்ளது. குறிப்பாக அதிக வாதம் பித்தத்தை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது. மிளகு மற்றும் வெற்றிலை வகையை சார்ந்த இந்த திப்பிலியானது கார சுவை உடையதாகவும் உமிழ்நீரை பெருக கூடியதாகவும் உள்ளது.

இந்நிலையில் பச்சை திப்பிலி குளிர்ச்சி தன்மையுடன் காணப்படுவதாகவும், காய்ந்த திப்பிலி உடலில் ஏற்படும் சளி போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. திப்பிலியில் அதிகமாக புரதம், கால்சியம், இரும்புச்சத்து, தையமின் போன்ற போன்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து காணப்படுகிறது.

சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா, இருமல், சளி, நுரையீரல் போன்ற பிரச்சினைகளுக்கு திப்பிலி சிறந்த பயன் தருவதாக உள்ளது. சளி தொடர்பான பிரச்சனைகளை அகற்றி நுரையீரல் மண்டலத்தைப் பலப்படுத்த உதவுகிறது. அதோடு செரிமான பிரச்சனைகள் தீர்வது மட்டுமல்லாமல் குரல் வளம் பெருக உதவுகிறது.

அதே போல் தசை வலி, உடல் வலி, நினைவாற்றல், நரம்புகள் வலி,சருமப் பிரச்சனை மற்றும் ஆண்மை குறைபாட்டை போக்கும் தன்மையுடையதாக உள்ளது. மேலும், பல் வலி இருக்கும் பொழுது உப்பு சேர்த்து பல் வலி இருக்கும் இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.