உடல் எடையை குறைக்க தினமும் சீரகம் சாப்பிடுங்க!

மாறி வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பலபேருக்கு செரிமான பிரச்சனை ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்கள் தினமும் ஜீரகம் சாப்பிடுவதின் மூலம் காட்டுசீரகம் வயிறு உபாதைகள், உடல் பருமன், சயாடிகா என்று கூறப்படும் நரம்புகள் இழுத்து வலிக்கும் பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

பல பேருக்கு சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீக்கம் ஏற்படும். இவர்கள் ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் கலந்து சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்க உதவுகிறது.

இந்நிலையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிடைக்கும். சூடு தண்ணீரில் ஜூரகத்தை சேர்த்து தண்ணீரை பருகி வந்தால் வாயு பிரச்சனைகள் தீர்ந்து உடல் எடையும் குறைக்க உதவுகிறது.

அதே போல் காட்டு சீரகத்துக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகளுக்க நல்ல பலன் கொடுக்கிறது. மேலும், ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளை தீர்பதற்கு உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *