உடல் எடையை குறைக்க தினமும் கிவி பழத்தை சாப்பிடுங்க!!

நவீன காலக்கட்டத்தில் டல் எடை அதிகரிப்பு என்பது, நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சனையாகும். இந்நிலையில் உடலை எடையினை குறைக்க பழங்கள் பெரிதும் உதவுகின்றனர். அந்த வகையில் கிவி பழத்தை உட்கொள்வதன் மூலம், அதிகரித்து வரும் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

இந்நிலையில் கிவியை தோல் நீக்கி தயிர், பாதம், தேன் சேர்த்து ஸ்மூத்தியாக உட்கொண்டால் உடல் எடை விரைவாக குறையும். சாலட் தொகுப்பில் கிவி பழத்தை சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் கிவி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

அதே போல் அல்சரால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து கிவியை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கிவியில் இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது.இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.

மேலும், இதய நோய், இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் வயிற்றில் ஏற்படும் உஷ்ணம் மற்றும் அல்சர் போன்ற நோய்களை நீக்குவதில் கிவி மிகவும் பயனுள்ள பழமாக இருப்பதால் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published.