எம்மாடியோ!! கேரட் தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

தினந்தோறும் கேரட் சாப்பிடுவதால் அவர்களின் உடலில் இருக்கும் செல்களின் ஆயுள் தன்மை அதிகரிக்கும். இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதின் மூலம் வயதாகும்போது எலும்பு உறுதித் தன்மை இழக்கும் அப்போது எலும்புகள் வலுவடைந்து உறுதித்தன்மை கிடைக்கும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்வது என்பது உடலிற்கு தீங்காக அமைகிறது. தினமும் கேரட் சாப்பிடுவதின் மூலம் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது.

கேரட்டில் கண் பார்வை சரியாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் கண் பார்வை மேம்படுவதோடு கண்ணில் புரை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

இவர்கள் அடிக்கடி உணவில் கேரட் சேர்த்துக்கொள்வதின் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது. அதோடு ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்களை தூய்மைப்படுத்தி தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…