நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிங்க!!

தினமும் நான் குடிக்கும் ஜூஸ்ஸில் பல்வேறு நன்கைகள் உடலுக்கு கிடைக்கின்றன. அந்த வகையில் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக ஆரஞ்சு பழத்தில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்நிலையில் தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் நீங்கும். ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் தினமும் ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கரையக்கூடிய கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவதற்கு பெரிதும் உதவுகிறது.
அதே போல் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு ஜூஸ் நல்ல பலன் கொடுக்கிறது. இதயத்தை சீராக இயக்ககூடிய ஒரு பொருளாக இருப்பதால் தினமும் அரஞ்சு ஜூஸ் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பல பேருக்கு முடி உதிர்வது அதிகம் இருக்கும். இவர்கள் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், சூரிய ஒளியால் சரும செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஆரஞ்சு பழ ஜூஸ் நல்ல பலன் கொடுக்கிறது.