முருங்கைப்பூ எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா?

நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையை போன்றே முருங்கைப் பூவிலும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ளன.

இந்நிலையில் முருங்கைப்பூவை பெண்கள் அடிக்கடி கஷாயம் செய்து சாப்பிட்டு வருவதால் மாதவிடாயில் ஏற்படும் ரத்தப்போக்கு, மாதவிடாயில் ஏற்படும் வலி, உடல் சூடு, தலைவலி மற்றும் உடல்சோர்வு போன்ற தொந்தரவுகள் நீங்க பயன்படுகிறது.

40 வயதுக்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண் பார்வை மங்கலாக இருக்கும். இவர்கள் முருங்கைப் பூவை உலர்த்தி பொடி செய்து தினமும் மூன்று கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கண்பார்வை பிரகாசம் அடையும். கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மறைய தொடங்கும்.

இதனிடையே உடலில் இருக்கும் ஞாபகமறதி மூளைத்திறன் செயல்பாடு, நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகளை சரி செய்வதில் அணைத்தும் குணமாகி விடும். முருங்கைப்பூவுடன் பால், பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை கோளாறுகள் தீரும்.

அதே போல் முருங்கைப் பூவில் கால்சியம், விட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. முருங்கைப் பூவை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதை ஊக்குவிக்கிறது. மேலும், கர்ப்பப்பை தொடர்பான நோய்களுக்கு முருங்கைப்பூ சிறந்த மருந்தாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…