சிறுநீரகத்தை பாதுகாக்க தினமும் அத்திப்பழம் சாப்பிடுங்க!!

தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக அத்திப்பழத்தில் வைட்டமின் பி,சி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு மார்பக புற்றுநோயை தடுப்பதற்க்கும், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காகவும் பெரிதும் உதவுகிறது.

இந்நிலையில் வளர்ந்து வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப பல பேருக்கு தூக்கமின்மை பிரச்சனை என்பது அதிகமாக இருக்கும். இவர்கள் அத்திப்பழ தினமும் சாப்பிடுவதால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

அதே போல் மூச்சு குழாயில் உள்ள அடைப்பை சரி செய்து தொண்டையில் இருக்கும் சலித் சவ்வுகளை மென்மையாக்கும் பண்பு உடையதாக அமைந்துள்ளது. மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் அத்திப்பழம் தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

இதனிடையே சிறுநீர்ப்பை கற்கள். கனிமச் சத்துகளின் தேக்கத்தினால் சிறுநீர் பையில் கற்கள் உருவாகும். இந்த சூழலில் அத்திப்பழத்தில் சோடியம், பொட்டாசியம், அயன் போன்ற ஏராளமான சத்துக்கள் கிடைப்பதால் சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது. அத்திப்பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனை குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.