அடேங்கப்பா!! மணத்தக்காளி கீரையில் இவ்வளவு மருத்துவ பயன்களா?

மணத்தக்காளிக் கீரையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவதன் மூலம் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் குணமடைய உதவுகிறது. வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப பல பேருக்கு அல்சர் ஏற்படுவது வழக்கம் அமைகிறது.

இவர்கள் இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் குடல் பிரச்சனை போன்றவற்றிற்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.

இந்நிலையில் மணத்தக்காளிக் காயை வற்றல் போன்று பயன்படுத்தி அதாவது உப்பு மற்றும் தயிர் சேர்த்து வெயிலில் தினந்தோறும் குழம்பில் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது. அதேபோல் உடலில் ஏற்படும் வெண் புள்ளிகளுக்கு மணத்தக்காளி பழம் சிறந்த மருந்தாக அமைகிறது.

இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. இதனிடையே மணத்தக்காளிக் கீரையை பொரியல், கூட்டு, சட்னி, ரசம் போன்றவற்றை செய்து சாப்பிடலாம். நாள்பட்ட தலைவலி இருப்பவர்கள் மணத்தக்காளிக் கீரையை சாப்பிடுவதன் மூலம் சிறந்த தீர்வு கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…