உடல் எடையை குறைக்க சுடு தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க காலையில் டீ காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் போது தண்ணீர் சூடாக இருக்க வேண்டும். அதோடு கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது மிகவும் நல்லது.
இந்நிலையில் சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடித்தால் உணவில் இருக்கும் எண்ணெய் கொழுப்புகள் கட்டிகளாக மாறிவிடும். இதனால் உணவு ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு சாப்பிட்டபின் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடிப்பதனால் ஜீரண சக்தியை அதிகரித்து கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு உதவும். இதனால் தொப்பை விரைவாக குறைந்து விடும். தொடர்ந்து 90 நாட்கள் காலையில் இதுபோன்று குடித்து வருவதால் உடல் வெப்பம் அதிகரித்து கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை விரைவாக குறைவது மட்டுமில்லாமல் கெட்ட கொழுப்பு குறைந்து விடும்.
இதனால் உடல் எடையை 4 முதல் 5 கிலோ வரை குறைக்கலாம். விரைவாக உடல் எடை குறைய விரும்பினால் ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு 2 கலந்து இரண்டு மாதங்கள் குடித்தால் 5 முதல் 6 கிலோ வரையில் எடையை குறைக்க முடியும்.
பல பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்று வலி ஏற்படும். இவர்கள் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகம் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வயிற்று வலி சீக்கிரம் குணமாகும். அதோடு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுடுதண்ணீர் நல்ல பலன் தரும். அதுமட்டுமில்லாமல் மலச்சிக்கலை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.