மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்: ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

நம் மண்ணின் பாரம்பரிய உணவு பொருட்களின் பலவற்றின் மகிமையை நான் உணர்வதில்லை. இந்நிலையில் வாதம், பித்தம், கவம் என்ற மூன்றையும் கட்டுப்படுத்தும் ஒரே மருந்து தேன் ஆகும். குறிப்பாக தேனில் இயற்கையாகவே இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சில வகை புற்று நோய்களுக்கு தற்காப்பு மருந்தாக உள்ளது.

தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்தம் உறைதலை தடுக்க பயன்படுகிறது. தேனில் இருக்கும் பாலிஃபீனால் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டுசெல்லும் கரோனரி இரத்த குழாய்களை விரிவடைய செய்து ரத்தம் உறைதலை தடுத்து மாரடைப்பு வராமல் காக்கும்.

குழந்தைகளுக்கு தூக்கத்தை கெடுக்கும் வகையில் இரவில் இரும்பல் வரும். இந்த சூழலில் தேன் கொடுப்பது நல்ல மருந்து என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வு ஒன்று கூறியுள்ளது. கால் டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொடுத்தால் அது இரவில் வரும் இருமலை கட்டுப்படுத்தும்.

உடலுக்கு தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது. வைட்டமின் சி சத்து இதில் அதிகம் உள்ளது. பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுகள் தேனில் நிறைந்துள்ளன. தேனில் இருக்கும் பாலிஃபீனால்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

மேலும், வயிறு வலிக்கும் இடத்தில் தேன் கலந்து தடவினால் வலி குறைந்து வீக்கம் குறையும். அதேபோல் பூஞ்சைகள் மற்றும் நோய் உரிமைகளை வெகுவாக அழிக்கக் கூடிய தன்மையைப் பெற்றுள்ளது. தேனில் உள்ள அமிலம் தொற்றுநோய் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.