உஷார்!! HIGH BP ஏற்படுவதற்கு முன் இந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றுமாம்..?

ஹைபர் டென்ஷன் என்று அழைக்கக்கூடிய உயர் ரத்த அழுத்தம் வராமல் இருப்பதற்காக இரத்த அழுத்ததை 80-120 என்ற நிலையில் வைத்திருப்பது நல்லது. இவ்வாறு இல்லை என்ற பட்சத்தில் தமனியில் ரத்த நாளங்களை சேதப்படுத்தி தீவிர ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைகிறது.

இதனால் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை அனுமதிக்காத சூழல் ஏற்படும். இவற்றால் தீவிர தாக்குதலை உண்டாக்கி உயிரைப் பறிக்கும் அபாயமும் ஏற்படுத்தும். இதனால் அதிக ரத்த அழுத்தம் இருக்கிறதா? என்ற பட்சத்திலும் அலட்சியமாக இருப்பதனால் பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமாக உள்ளது.

இந்நிலையில் கடுமையான தலைவலி, மங்களான பார்வை, மனத்தெளிவின்மை குறிக்கும் மூச்சுதிணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அனுகவேண்டும் என கூறுகின்றனர். இந்த சூழலில் வயது முதிர்வு, உடல் எடை அதிகரித்தல் போன்ற பல காரணங்களினால் ஹைய் பிபி ஏற்படும்.

இதனை வாழ்கைமுறையினை மாற்றுவதின் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதன்படி அதிக அளவு உப்பு மற்றும் சோடியம் நிறைந்த நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். அதோடு வாரத்திற்கு ஒருமுறை உப்பு சேர்க்காத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு அதிகப்படியான ரத்தம் அழுத்தம் ஏற்படுத்தி இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே போல் அதிக அளவிலான மன அழுத்தம் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடற்ற ஹைபர் டென்ஷன் இருக்கும். மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *