மருத்துவ குணங்கள் நிறைந்த வெள்ளைப்பூசணி சாறு!! ஏன் குடிக்க வேண்டும் தெரியுமா?
நம்மில் அனைவருக்கும் தேனீர், காபி குடிப்பதால் புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால் காலையில் வெள்ளை பூசணி ஜீஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றனர். இந்நிலையில் வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம், பொட்டாசியம்,இருப்பு சத்து, நார்சத்து சத்துக்கள் நிறைய காணப்படுகின்றன.
இதனிடையே காலையில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் அல்சரில் பாதிக்கப்படுபவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குறிப்பாக அதிக காரம் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
தினமும் காலையில் வெள்ளைப் பூசணிக்காய் சாறில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். வெள்ளை பூசணிக்காயில் கலோரிகள் குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தினமும் குடிக்கலாம்.
உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் வெள்ளை பூசணிக்காய் சாறு குடிப்பதன் மூலம் உடல் சூடு தணியும். அதோடு வெள்ளை பூசணி சாறுடன் தினமும் காலை மாலை வேலைகளில் தேன் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
மேலும், சிறுநீரகத்தில் தொற்று ஏற்படுவது, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்படுபவர்கள் வெள்ளை பூசணிக்காய் சாறு குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.