அடேங்கப்பா..! கமலா ஆரஞ்சு பழத்தில் இவ்வளவு நன்மைகளா ?

சத்துக்கள் நிறைந்த பழங்கள் பல இருந்தாலும் அதில் கமலா ஆரஞ்சு தனித்தன்மையை வாய்ந்தது. இந்நிலையில் கமலா ஆரஞ்சு பழத்தில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

பல பேருக்கு உடல் எடை கூடுவது என்பது இன்றியமையாத உள்ளது. இவர்கள் இந்த சூழலில் ஆரஞ்சு பழத்தில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் டையட்டில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதனிடையே தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் நீங்கும். ஆரஞ்சு பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள கரையக்கூடிய கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

ஆஞ்சில் பொட்டாசியம் என்ற கனிம சத்து இதில் உள்ளது. இது இதயத்தை சீராக இயக்ககூடிய ஒரு பொருளாக இருப்பதால் தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் அதற்கு பெரிதும் உதவுகிறது.

மேலும், பல பேருக்கு முடி உதிர்வது அதிகம் இருக்கும். ஆனால் ஆரஞ்சு பழத்தில் அதிக வைட்டமின் சி உள்ளதால் முடி கொட்டுவதை தவிர்க்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால் சூரிய ஒளியால் சரும செல்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *