தலையணை இல்லாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

தலையணை இல்லாமல் பலப்பேருக்கு தூக்கம் வருவது என்பது கடினம். ஆனால் தலையணையுடன் தினமும் தூங்குவதால் உடல் மற்றும் மனது பாதிப்படுமாம். இந்நிலையில் தலையணை இல்லாமல் தூங்குவதால் உடல் இயல்பு நிலையில் இருக்கும்.
இந்நிலையில் தலையணையைப் பயன்படுத்தி தூங்குவதால் வரும் காலங்களில் முதுகு வலியை ஏற்படுத்தக்கூடும். எனவே முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்க தலையணை இல்லாமல் உறங்குவது நல்லது.
தலையணை கழுத்து வலியை ஏற்படுத்தும். சில பேருக்கு காலையில் எழும்போது தலைவலியுடன் எழுவர். இதற்கு தலையணையும் ஒரு காரணமாக அமைகிறது. தலையணையை பயன்படுத்தும் போது கழுத்து முன்னோக்கி அழுத்தப்படுவதால் கழுத்து தசைகளுக்கு அதிக பதற்றத்தை சேர்கிறது.
தினமும் தலையணையை பயன்படுத்துவதால் உடலில் அதிக மன அழுத்த ஹார்மோன் வெளிப்படும். இதனால் தலையணையை தவிர்ப்பது மிகவும் நல்லது. பலரும் தலையணை உறையை தினமும் துவைப்பது கடினமாக நினைப்பார்கள். இந்த சூழலில் தலையணையை பயன்படுத்தும்போது அதிகப்படியான மாசு முகத்தில் படுவதால் முகப்பருக்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
மேலும், தலையணையை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் விரைவில் உடைய செய்கிறது.