கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!!
மழைக்காலங்களில் நோய் தொற்று ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதால் தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும் மட்டுமில்லாமல் உடலுக்கு பலவித நன்மைகளும் கிடைக்கிறது.
இதனிடையே கொய்யாபழத்தில் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் உள்ளதால் வயிறு, குடல், இறைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வலுப்பெறும். ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
கொய்யாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. இப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும்.
குறிப்பாக கொய்யாப்பழம் முகத்திற்கு பொலிவைத் தருவதோடு தோல் வறட்சியை நீக்குவதற்கு உதவுகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
இந்நிலையில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவதால் மது பருகும் ஆசை நீங்கிவிடும். மேலும் கொய்யா இலை மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் மற்றும் தொண்டை வலி போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக இருக்கிறது.