இளநரை வராமல் தடுக்க இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்..?

hair

வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப இளநரை என்பது பலபேருக்கு அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டாலே போதும் இளநரையில் இருந்து நிரந்தர தீர்வு காணமுடியும்.

இந்நிலையில் கீரை மற்றும் ப்ரோக்கோலியில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இளநரை வருவது தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வெந்தயத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் அதிகம் இருப்பதால் முடி வளர்வதற்கு பெரிதும் உதவுகிறது.

புளுபெரீஸ் பழங்களில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் வயது முதிர்வை தடுப்பது மட்டுமில்லாமல் முடி வளர்வதற்கு பெரிதும் உதவுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை மீன்கள் உணவில் சேர்த்து கொள்வதால் ஒமேகா3 மற்றும் புரோட்டின் அதிகமாக கிடைக்கிறது. இதனால் முடி அடர்த்தியாக வளர்வதற்கு பெரிதும் உதவுகிறது.

சூரியகாந்தி எண்ணெய்களில் விட்டமின் இ, பி6, இரும்புச் சத்து, துத்தநாகம் ஆகியவை இருப்பதால் நரை முடி வருவதை தடுக்கும். அதே போல் ரிஷி காளான் வகைகளில் மெக்னீஷியம் மற்றும் இரும்புச்சத்து இருக்கிறது. இவை கூந்தலின் அசல் நிறத்தை பாதுகாக்க உதவுகிறது.

மேலும், சிப்பிக்குள் இருக்கும் சதைப்பகுதிகளில் துத்தநாகம், விட்டமின் பி, 12 இருப்பதால் வலுவிழந்த கூந்தலை வளர உதவுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொண்டாலே இளநரை வருவதை சுலபமாக தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *