அழகான தோற்றத்துக்கான ஆலோசனைகள்
நிறத்துக்கு தகுந்த ஆடை அணிவதை தவிர்த்து, உங்களுக்கு பிடித்த நாகரிகமான ஆடையை அணிய பழகுங்கள். ஆவார் அணியும் போது உங்களை அறியாமலேயே மகிஷி கூடும். அது தானாகவே உங்கள் முகத்தில் புன்முறுவலையும், மனதில் தன்நம்பிக்கையும் அதிகரிக்கும். மற்றவர்களிடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள்.
அதிகமான அலங்காரத்தை தவிர்த்து, எளிய முறையில், அணியும் ஆடைக்கும் பொருந்தும் வகையில் அணிகலன்களை தேர்வு செய்யுங்கள். அது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்காது, உங்களுக்கும் அசவுகிரியம் ஏற்படாது.
எப்பொழுதும் புன்னகையை முகத்தில் தவழவிடுங்கள். புன்னகையே பல சமயம் சிறந்த அலங்காரமாகும்.
நிறத்தை பற்றிய கவலையை விடுத்து, உங்களிடம் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, அதை முழுமையாக வளர்த்து, தன்னம்பிக்கையுடன் மற்றவர்களிடம் பழகத் தொடங்குங்கள்.
தனிமையை தவிர்த்து நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது நல்லது. உங்கள் நிறத்தை பற்றிய விமர்சனத்தை யாரவது முன் வைக்க நேர்ந்தால், சற்று தளராமல் ‘அது ஒரு குறை அல்ல’ அன்று ஆணித்தரமாக உணர்த்துங்கள். நாளடைவில் உங்களை விமர்சித்த கூட்டம் குறைந்து, உங்களை முன்மாதிரியாக பின்பற்றும் நண்பர்கள் கூட்டம் அதிகரிக்கும்.