அடேங்கப்பா..! முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா ?
முருங்கைக் கீரையில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. குறிப்பாக முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாறை குடிப்பதின் மூலம் உடல் சூடு தணிவதுடன் மல்லாமல் வெப்பத்தினால் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
முருங்கை கீரையில் எண்ணற்ற பயன்கள் இருப்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பொரியல் செய்து சாப்பிடுவது இதில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் அதிகமாக உள்ளன. அதோடு சுண்ணாம்பு சத்து, இரும்பு, புரதம், கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன..
மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவடைந்து வரும் ஆனால் முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம் கர்ப்பப்பையை பலப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. அதே சமயம் முருங்கைக் கீரை மற்றும் வேர்கடலையை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை நன்றாகவே வலுவடையும்.
பலபேருக்கு உடம்பு மற்றும் மூட்டு வலிகள் ஏற்படுவது வழக்கம். அவர்கள் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் அனைத்து வலிகளும் சரியாகிவிடும். ரத்த சோகை இருப்பவர்கள் முருங்கை இலையை நெய்யில் வதக்கி சாப்பிடுவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும்.
சரும பிரச்சனை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சாப்பிடுவதன் மூலம் இதில் இருந்து தீர்வு காண முடியும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி ஏற்படுவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கைப்பிடியளவு முருங்கைக் கீரை மற்றும் சீரகத்தை இடித்து சாறு பிழிந்து அதனை மாதவிடாய் காலங்களில் குடிப்பதன் மூலம் வயிற்று வலி நீங்கும்.
கர்ப்பம் தரிக்கும் பெண்கள் முருங்கைக்கீரையை சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவிற்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த சாரை குடிப்பதன் மூலம் பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும், ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிடுவதால் மலட்டுத்தன்மை நீங்குவதோடு மாரடைப்பு போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.