வெயில் கால சோர்வை போக்க இதெல்லாம் சாப்பிடுங்க !!

வெயில் காலத்தில் பொதுவாக தூக்கமின்மை, பசியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு அதன் விளைவாக அதிகமான உடல் பருமன் மற்றும் மன சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

சரியான உணவு முறைகளை கடைபிடித்தால் சோர்வு நீங்கி உற்சாகமாக இருக்கலாம் என உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக முட்டை, பால் போன்ற புரத சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது அந்த நாளுக்கு தேவையான சக்தியை கொடுப்பதுடன் நீரீழப்பு ஏற்படுவதை தவிர்க்கும்.

அந்த வகையில் தர்பூசணி, கிட்ணி, ஆரஞ்சு, மாம்பழம், அன்னாட்சி, ஸ்டாபெரி போன்ற பழங்களை சாப்பிடுவது சூட்டை தணித்து உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் உறுதிசெய்யும்.

வெயில் காலத்தில் கிடைக்கக்கூடிய காய்கறிகளான புடலங்காய், பீர்க்கங்காய், ப்ரோக்கோலி, பாவக்காய் போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைப்பதோடு ரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

மேலும் கொண்டைக் கடலை, சுண்டல், முளைகட்டிய தானியங்கள் போன்ற ஆரோகியமான உணவுகளை மாலை வேலைகளில் எடுத்துக்கொண்டு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸ், க்ரீன் டீ ஆகியவற்றை குடித்து வந்தால் வெயில் கால சோர்வை சுலபமாக போக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *