கத்திரிக்காயில் உள்ள நலன்கள்…

நம் நாட்டு மக்களின் ஒவ்வொரு நேர உணவின் போது பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் வழக்கம். அப்படி நம் நாட்டு மக்கள் சாப்பிடுவதற்காக பல காய்கள் நமது நாட்டில் விளைகின்றன. அதில் ஒன்றுதான் கத்திரிக்காய். இந்த கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடை குறைப்பு:
கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடலுக்கு கெடுதல் ஏற்படுவது போன்ற அதிகம் காரணம் இருக்கிறது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் உண்டால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும்.

சுவாசக் கோளாறுகள்:
நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்னுக்கு தெரியாத கிருமி, மாசுகள் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.

புகை பழக்கம்:
புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லாது மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும்.தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு நுரையீரல், வாய் போன்ற இடங்களில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. கத்திரிக்காய் புகையிலையில் இருக்கும் நிக்கோடின் ரசாயனம் சிறிதளவு கொண்டிருக்கிறது. ஆனால் கத்திரிக்காயில் இருக்கும் இந்த நிக்கோடின் ரசாயனம் புகை பழக்கம் கொண்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது.

ஊட்டச்சத்து:
கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…