உடல் எடையை அதிகரிக்க இந்த முறையை பயன்படுத்தலாம்..!

உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க வேண்டும் என்பதில் அனைவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மாறிவரும் உணவு பழக்க முறையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலர் இருந்தாலும், உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என பலர் முயற்சித்துக் கொண்டு தான்  இருக்கிறார்கள்.  ஒவ்வொருவரின் உயரத்திற்கேற்ப சீரான உடல் எடையை பராமரிப்பது அவசியமானது.  

உடல் எடையை அதிகரிப்பதற்காக அதிக கொழுப்பு சத்து நிறைந்த பொருட்கள்  எடுத்துக் கொள்வது, முறையான மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகள் உட்கொள்வதாது நாம்  உடல் நலத்தை  பாதிக்க கூடும். 

உடல் எடை அதிகரிப்பில், தேங்காய் சார்ந்த உணவுகளுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. அந்த வகையில் அன்றாட சாப்பிடும் உணவில் தேங்காய் சேர்த்துக்கொள்வது மற்றும் வாரம் இருமுறை தேங்காய் பால் அருந்துவது  உடலிடை அதிகரிப்பில் சிறந்த பலன் தரும்.      

பால் சார்ந்த உணவு வகைகளான நெய்,வெண்ணெய்,தயிர் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல  பலனை தரும். தினமும் ஒரு செவ்வாழை எடுத்துக் கொள்வது நம் உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

நாம்  காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்னாள் உலர வைத்த பாதாமை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது சிறந்த வழியாக இருக்கும்.மேலும் எள் உடல் எடை அதிகரிப்பில் சிறந்த ஒன்று. எள்ளு பொடி. எள்ளு சட்னி,எள்ளு உருண்டை, எள்ளு  தோசை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இவை சுவையாக இருப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

அவரவர் உடலுக்கு ஏற்றவாறு சரியான உணவு முறையை மேற்கொள்வதன் மூலம் இயற்கையாகவே உடலிடையை அதிகரிக்கலாம்.  

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…