அரோமா தெரபி  – உடல் அழுத்தத்தை குறைப்பதற்கான சரியான வழி!

பொதுவாக குளிர் காலங்கள்  என்றாலே நாம் அதிகம் சோர்வடைய கூடும். அதிகமான வேலைப்பளு நம்மை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடையச்  செய்யும்.  நமது அன்றாட வேலை நம்மை சோர்வடைய செய்யும் போது நமது மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நம்மை புத்துணர்ச்சியாக உணர்வதற்கும் நமக்கு ஓய்வு என்பது நிச்சயம் தேவைப்படும். அந்த வகையில் நமது உடல் மட்டுமல்லாமல் மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் உணரச் செய்யும் இந்த  அரோமா தெரபி.

தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களின் வாசனையை முகரும் போது, உடலில் தேய்த்து கொள்ளும் போதும் நம்மை புத்துணர்ச்சியாக உணரச்செய்யும். அரோமா தெரபியை நாம் எந்த வகையில் பயன்படுத்தினாலும் இது நமது மன அழுத்தத்தை குறைத்து நம் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். இந்த முறை மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.  

நம் மூளையின் செயல்பாடு மற்றும் நமது நினைவாற்றலை அதிகரித்து  கொள்ள வேண்டுமானால் நல்ல தூக்கம் மிகவும் அவசியமானது. இதில் பயன்படுத்தப்படும் லாவெண்டர் எண்ணெய் நம் மனதை அமைதிப்படுத்தி நல்ல உறக்கத்தை வர வைக்கும்.

இந்த அரோமா தெரபியை வீட்டிலேயே செய்யலாம்.இதுபோன்ற எண்ணெய்களை  உபயோகிக்க டிஃப்யூசர் பர்னரை பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணையை முப்பது முதல் அறுபது நிமிடங்களுக்கு அதன் வாசனையை நுகர வேண்டும். இதை அதிக நேரம் பயன்படுத்த கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  அரோமா தெரபியை செய்வதற்கு லாவெண்டர் ஆயில், பேப்பர் மின்ட் ஆயில், லெமன் ஆயில் போன்ற வற்றை பயன்படுத்தலாம். 

இவ்வாறு செய்வதன் மூலம் நமது உடல் மற்றும் மனதளவில் கிடைக்கும் அமைதி நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…