இத சொன்னா எல்லாம் உடற்பயிற்சி செய்றாங்களா…இது என்னடா புது டிரெண்டா இருக்கு!

உடற்பயிற்சி செய்வது என்பது அனைவருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒன்றாகும். அதேசமயம், தினுமும் உடற்பயிற்சி செய்றது எவ்வளவு பெரிய வேலைத் தெரியுமா என்று கேக்குறவங்களும் இருக்காங்க. ஏன் நம்மில் பலரும் தினமும் உடற்பயிற்சி செய்யணும்னு தீர்மானம் எடுத்துட்டு அதை செய்ய முடியாம போனதும் நிறையவே இருக்கும். இப்படி உடற்பயிற்சி செய்யாதவங்கள என்ன சொன்னா உடற்பயிற்சி செய்வாங்க என்பதை சோதிப்பதற்காக அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வினை கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகம் மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஒருவரை உடற்பயிற்சி செய்ய உந்து சக்தியாக இருப்பது என்ன என்று சோதிக்கையில் அவர்களது உடல் பருமனோ, நிதி நிலைமையோ உந்துசக்தியாக இருப்பதில்லை மாறாக உடற்பயிற்சி நிலையங்கள் அனுப்பும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் விரைவில் இறக்க நேரிடும் என்பன போன்ற குறுஞ்செய்திகளே அவர்களுக்கு உந்து சக்தியாக அமைகிறது.

இந்த ஆய்வில் 669 பேர் உட்படுத்தப்பட்டு அவர்களிடம் உடற்பயிற்சி மேற்கொள்வது குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டு, அந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் அவர்கள் அளித்த பதில்களைப் பார்க்கையில் அது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. உடல் நலன் பற்றிய கவலையோ அல்லது வேறு ஏதேனும் சமுதாயக் காரணிகளோ அவர்களுக்கு உந்துசந்தியாக இருக்கவில்லை. உடற்பயிற்சி நிறுவனங்களின் உயிர் சம்பந்தப்பட்ட அச்சத்தை ஏற்படுத்தும் குறுஞ்செய்திகளே அவர்களை உடற்பயிற்சி செய்ய காரணியாக அமைவது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய உடற்பயிற்சி நிலைய நிறுவனர் கூறியதாவது, இந்த ஆய்வு உடற்பயிற்சி நிலையங்கள் நடத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், மேலும் ஆண்/பெண் என பாலின பாகுபாடின்றி அனைவரையும் உடற்பயிற்சி மேற்கொள்ள வைக்க இந்த ஆய்வு உதவிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *