நலம் நலமாக… குழந்தைக்கு எதுவரை பாலூட்டலாம்

ஒரு பெண் முழுமையடைவது அவள் தாய் ஆன பின்தான் என்று கூறுவது உண்டு. உண்மையில், ஒரு பெண் கர்ப்ப காலத்தில்தான் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அதன்படி, ஒரு பெண் தாயாக ஆகப்போகிறோம் என்று முடிவானவுடன் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு காண்போம். இது குறித்து டாக்டர் சாந்தினி விளக்குகிறார்.
குழந்தைக்கு எதுவரை பாலூட்டலாம்?
இதற்கு, ”குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக பாலூட்டத் தொடங்க வேண்டும். அதில் இருந்து தொடர்ச்சியாக 6 மாதம் வரை கண்டிப்பாகத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது.
ஏதேனும் உடம்பு சரியில்லை என டாக்டர்கள் மருந்து கொடுத்தால் மட்டுமே அதைக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், செரிமானம் ஆகவில்லை என எதையும் கொடுக்கக் கூடாது.
ஆறு மாதத்திற்கு பிறகுதான் மற்ற உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும். பிற உணவுகள் கொடுக்க ஆரம்பித்த பின்பும் 2 வயது வரை தாய்ப் பால் கொடுக்கலாம். அதன்பிறகும் தாய் விருப்பப்பட்டால் தொடர்ந்து கொடுக்கலாம்” என டாக்டர் சாந்தினி கூறியுள்ளார்.