நலம் நலமாக… ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு இவ்வளவு தீங்கை ஏற்படுத்துமா?

பொதுவாக, நம் பற்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிலருக்கு வாய் துர்நாற்றம், பற் சொத்தை போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். அது, நாம் பேசும் போது கூட வெளியில் வரும். இந்த வாய் துர்நாற்றத்தையும், சொத்தை பிரச்சனையையும் சரி செய்வது எப்படி என டாக்டர் விக்னேஷ் எழில் ராஜன் கூறுவதைப் பார்ப்போம்.

பல் வலிக்கு மெடிக்கல் ஷாப்களில் மருந்து வாங்கி சாப்பிடுவது தீர்வைத் தருமா?


இது குறித்து “முதலில், எந்தவொடு பிரச்சனைக்கும் அதன் மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்குத் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். பல் வலிக்கு மெடிக்கல் ஷாப்களில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது அந்த ஒரு நாளுக்கு மட்டும்தான் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஆனால், முழுமையாக குணமாக வேண்டும் என்றால் டாக்டரை அணுகுவதுதான் சிறந்தது” என டாக்டர் கூறுகிறார்.

ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

இதற்கு, “பற்களை விட ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு ஆபத்தானது. ஏனெனில் பற்களில் நமக்கு சொத்தை போன்ற பாதிப்புகள் ஏறப்டும் போது, வலி இருக்கும். அதன் மூலம் பாதிப்பு இருக்கிறது என உணர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகள் வலியைக் கொடுக்காது. அதனால், பாதிப்பு ஏற்படுவதே வெளியில் தெரியாது.

இறுதியாக, பற்களுக்கு இடையில் இடைவெளி விழுந்து ஈறுகள் இறங்கி பற்கள் ஆட ஆரம்பித்து விடும்.மேலும், ஈறுகளில் பிரச்சனை இருக்கும் போது, இதயம் சம்பந்தமான பிரச்சனைகளும்,தோல் சம்பந்தமான பிரச்சனைகளும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, ப்ரஷ் செய்யும் போது, ஈறுகளில் இரத்தம் கசிந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது சிறந்தது” என டாக்டர் விக்னேஷ் எழில் ராஜன் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டயலினத்தவர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு… அனைத்து கட்சி போராட்டம் விரைவில்…

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் பட்டயலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத் விவகாரத்தில் மாநில…

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…