லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவு மனுவை தள்ளுபடி செய்தது பஞ்சாப் உயர்நீதிமன்றம்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும், பஞ்சாபைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய இளைஞரும் பாதுகாப்பு கோரி பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய பஞ்சாப் உயர்நீதிமன்றம் தஞ்சம் அடைந்த இருவரும் திருமணமாகாதவர்கள் என்று அறிந்து கொண்டது. மேலும் திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்க முடியாது எனக் கூறி உத்தரவிட்டது.
மேலும் அவர்களது பாதுகாப்பு மனுவையும் தள்ளுபடி செய்தது.