விவாகரத்துக்கு பின் திருமணம் செய்துகொண்டால் என்ன தப்பு… சாதி பஞ்சாயத்தை எதிர்த்த இளம்பெண்!

மகாராஷ்டிர மாநிலத்தில் விவாகரத்துக்குப் பின் வேறு திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு வினோதமான தீர்ப்பை வழங்கியுள்ளது சாதி பஞ்சாயத்து.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த 2015-ல் விவாகரத்து ஆகியுள்ளது. 2019-ல் அவர் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
அந்த பஞ்சாயத்தில் அந்த பெண்ணுக்கு தண்டனையாக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாழைப்பழ தோளில் துப்பும் எச்சிலை நாக்கால் சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லியுள்ளனர்.
தங்களது சாதிய வழக்கத்தின் படி இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குற்றம் என சொல்லி இந்த தண்டனையை பஞ்சாயத்தார்கள் கொடுத்துள்ளனர்.
அதை செய்ய மறுத்ததோடு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். விசாரணையில் பஞ்சாயத்து மீது தவறு இருப்பது உறுதியானது. அதனால் மக்களை சமூக புறக்கணிப்பில் இருந்து பாதுகாக்க உதவும் சட்டத்தின் கீழ் பத்து பேர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.