வீட்டிலும் மாஸ்க் ஏன் அணிய வேண்டும்?
இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மற்ற வைரஸைப் போல இருமும் போதும், தும்மும் போதும் பரவுவதோடு மட்டுமல்லாமல் காற்றின் மூலமும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வீட்டில் இருக்கையிலும் மாஸ்க அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வீட்டில் இருக்கும் ஒருவருக்கு தொற்று பரவுகையில் அதன் மூலம் மற்றவருக்கும் பாதிப்பு எளிதாக ஏற்பட்டு விடுகிறது.
அதன்மூலம், குடும்பம் குடும்பமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா இப்படிப் பரவும் போது, அதனை கட்டுப்படுத்துவதும் முடியாத காரியமாகிறது.
மேலும், மாஸ்க் அணிகையில் அது நம்மை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் நமக்கு எதிரில் இருப்பவருக்கும் அதிகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தற்போது உலகில் உள்ள அசாதாரண சூழ்நிலையைச் சமாளிக்க வீட்டில் இருக்கையிலும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.