இரவு நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டா சோம்பேறி ஆகிடுவோமா?
உணவுப்பழக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால், தற்போது உணவுப் பழக்கத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உணவுப் பழக்கங்கள் மாறி வருவதால் உடலளவில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக இரவு நேரங்களில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அடுத்த நாள் வேலை பார்க்கும் திறனை குறைத்து உடல் சோர்வை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.அந்த ஆய்வில் பலர் பங்கேற்று அவர்களின் பதில்களை பதிவு செய்துள்ளனர்.இரவு தூங்குவதற்கு முன் என்ன உணவு அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறீர்கள், அப்படி சாப்பிடும் உணவு அல்லது ஸ்நாக்ஸ் அவர்களது வேலை பார்க்கும் திறனை குறைக்கிறதா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.
ஆய்வில் கலந்து கொண்டவர்களின் பதிலின் அடிப்படையில் இரவு நேரங்களில் அதிகம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வேலை பார்க்கும் திறனை குறைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் அதிகம் இரவு நேரங்களில் சரியான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்காதவர்கள் தங்களது அடுத்த நாள் வேலையில் முழுத் திறனுடன் செயல்பட இயலாதது நிரூபணம் ஆகியுள்ளது.
சரியான உணவுப்பழக்கம் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.