’மிஸ் இலங்கை’ பட்டம் பறிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மீண்டும் கிரீடம் சூடிய புஷ்பிகா

இலங்கை கொழும்புவில் மிஸ் இலங்கை 2021 நடைபெற்றது.அதில் மிஸ் இலங்கை பட்டம் பெற்றவரிடமிருந்து பட்டம் பறிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான மிஸ் இலங்கை பட்டம் புஷ்பிகா சில்வா என்பவருக்கு வழங்கப்பட்டது. கிரீடத்தை சூடிய மகிழ்ச்சியில் இருந்த புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இந்த பட்டத்தை பெற தகுதி இல்லை என கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலின் கிரீடத்தை பறித்தார். இதனையடுத்து மிஸ் இலங்கை பட்டம் புஷ்பிகா சில்வாவிற்கு வழங்கப்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததை அடுத்து புஷ்பிகாவுக்கே பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.