இந்திய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!
ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து நடத்திய ஆய்வில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐ.நா.வின் UNSDSN என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 149 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்த நிலையில் பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் மகிழ்ச்சியான சூழல், ஜிடிபி நிலவரம், சமூகசூழல், ஆதரவு, தனிநபர் சுதந்திரம், ஊழல் ஆகியவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை எப்படி மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடம் பிடித்த பின்லாந்து நாட்டை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இந்த ஆய்வில் இந்தியா 139 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.