இனி நாமும் வீட்டிலேயே ரோஸ் வாட்டர் செய்யலாம்!
திருமண வீடுகளில் வரவேற்பு முதல் அழகுக் குறிப்புகள் வரை அனைத்திலும் முக்கிய இடம் பிடிப்பது ரோஸ் வாட்டர். சருமத்திற்கு என போடப்படும் அனைத்து பேஸ் பேக்குகளிலும் ரோஸ் வாட்டர் தவறாமல் இடம்பிடித்து விடும். இந்த ரோஸ் வாட்டரை இனி நாமே வீடுகளில் செய்யலாம்.
ரோஸ் வாட்டர் செய்வதற்கு பெரிதாய் ஒன்றும் தேவையில்லை. பிங்க் நிறத்தில் இருக்கும் நாட்டு ரோஜா பூக்கள் மட்டும் போதும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 ரோஜா பூக்களின் இதழ்கள் வேண்டும். ரோஜாக்களின் இதழை தண்ணீரில் சேர்த்து, மிதமான சூட்டில் அடுப்பில் வைக்க வேண்டும். பின், மூடிவைத்து அப்படியே விட்டுவிட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீர் கால் லிட்டராக மாறும் வரை அப்படியே அடுப்பில் வைக்க வேண்டும். பின்னர், வடிகட்டி வைத்துக் கொண்டால் அவ்வளவு தான் ரோஸ்வாட்டர் தயார்!