கசக்கும் பாகற்காய்… இனிக்க வைக்கும் அதன் நன்மைகள்
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் பாகற்காய் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிகளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். சில காய்கறிகளில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதன்படி பாகற்காயில் உள்ள மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம்.
பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மூப்படைத்தலை தாமதப்படுத்தும். கல்லீரலை பலப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வெளியேற்றும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். சரும நோய்களை குணமாக்கும். மாரடைப்பைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும். கொழுப்பை கரைக்கும்.
தொற்று நோய்களைப் போக்கும். பீட்டா கரோட்டின் இருப்பதால் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இவ்வாறு பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.