தினசரி நடை பயிற்சி முக்கியம் மக்களே… ஏன் தெரியுமா?

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த நாம் செய்ய வேண்டிய எளிய வழி, தினமும் ஒரு 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது. இது நம்முடைய இதய, சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை, எலும்புகளை உறுதியாக்குகிறது. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களை வராமல் தடுக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஐந்து பலன்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்!

1) கலோரி எரிக்கப்படுகிறது

நாம் நடக்கும்போது நம்முடைய உடலில் உள்ள அதிகப்படியான கலோரி எரிக்கப்படுகிறது. இது உடல் எடையைப் பராமரிக்க, எடையைக் குறைக்க உதவிக்கரமாக இருக்கிறது. எவ்வளவு கலோரி எரிக்கப்படும் என்பது நாம் எவ்வளவு வேகமாக நடக்கிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம், என்ன மாதிரியான (மலைப்பகுதி, சாய்வு தளம், சமதளம்) இடத்தில் நடக்கிறோம், நம்முடைய உடல் எடையைப் பொருத்து மாறுபடும்.

2) இதயத்தை உறுதியாக்குகிறது

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதய ரத்த நாள அடைப்பு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 19 சதவிகிதம் அளவுக்கு குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது நம்முடைய வாழும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கிறது.

3) ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது

நம்முடைய உடலில் இயக்கம் நடக்கும் போது கலோரி எரிக்கப்படுகிறது. இதனால் தசைகளுக்கு உணவு தேவைப்படுகிறது என்பதால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை அவை ஈர்க்கின்றன. ஒரு குழுவினரைத் தினமும் காலை, மதியம், இரவு உணவு உண்ட பிறகு தலா 15 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய வைத்து ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் அவர்கள் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்திருந்தனர். அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, உணவு உட்கொண்ட பிறகு வீட்டைச் சுற்றியோ, அலுவலகத்தைச் சுற்றியோ ஒரு வேக நடைப் பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.

4) மூட்டு வலிக்கான வாய்ப்பைக் குறைக்கிறது

தொடர்ந்து உடல் மூட்டுக்கள் இயக்கப்படும் போது மூட்டுக்களின் இயக்கத்துக்குத் தேவையான திரவம் சுரக்கப்படும். மூட்டு குருத்தெலும்பு எலும்பு, தசைகள், சவ்வுகள் உறுதியாகின்றன. இதன் காரணமாக மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

5) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது

தொடர்ந்து நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் காரணமாக சாதாரண சளி, காய்ச்சல் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நன்கு நடைப்பயிற்சி செய்வதன் மூலம் சுவாச மண்டலம் புத்துணர்வு பெறுகிறது. இதனால் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த் தொற்றால் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை வருகிறது. நடைப் பயிற்சி செய்யாதவர்களைக் காட்டிலும் நடைப் பயிற்சி செய்பவர்களுக்கு சுவாசப் பாதை 43 சதவிகிதம் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வீட்டில் டிரெட்மில் இருந்தால் அதில்… இல்லை என்றால் மாடியில், வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களில் என எங்கு வாய்ப்புள்ளதோ அங்கு நடைப்பயிற்சி செய்து நலம் பெறுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…