திண்டுக்கலை திணறடித்த ஒரு ரூபாய் பிரியாணி!

இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் கூடியது.

திண்டுக்கல்லில் மற்ற உணவுகளைவிட பிரியாணிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதன் சுவைக்கும் மணத்திற்கும் உலகமே அடிமையாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உப்புக்கறி உணவகம் உழைக்கும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி 1 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தது.

இதனால் சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் அந்த ஹோட்டலில் வரிசையில் நின்றனர். பின்னர் ஒருவருக்கு 1 டோக்டன் என்ற முறைப்படி 1 பாக்ஸ் பிரியாணி வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…